கடனை திருப்பிக் கேட்கச் சென்ற இளைஞர் கொலை

0
1

 

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகுல பகுதியில் நேற்று (05) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடனாக கொடுக்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நிதி தகராறு காரணமாக இக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here