நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் கடன் சலுகைளை பெற்றுக்கொடுக்குமாறு நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புரைக்கமைய மத்திய மாகாண கல்வி சேவையாளர்களின் சணச சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு குறித்த சலுகையினை பெற்றுக்கொடுக்க நேற்று (2021.06.15) திகதி கூடிய பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
இந்த சலுகை விண்ணப்பிக்கும் அங்கத்தவர்களுக்கு மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன் எதிர்ப்பார்க்கும் சகல அங்கத்தவர்களும் தங்களது விண்ணப்ப கடிதங்களை cpedusanasa@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் whatsapp இலக்கத்திற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளன.
மேற்படி சலுகையினை விண்ணப்பிக்கும் அங்கத்தவர்களிடமிருந்து அறவிடப்பட்ட பின் மீண்டும் அவர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படுவதனால் அங்கத்தவர்களின் வங்கி, கிளை கணக்கு விபரம், கணக்கு விபரம், தொலைபேசி இலக்கம் ஆகியன குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கே.சுந்தரலிங்கம்