கடமைகளைச் சரியாகச் செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும்

0
216

தமது கடமைகளைச் சரியாகச் செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,“ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு நான் யாரையும் கோரவில்லை.

நாட்டின் எதிர்காலத்துக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும்.

தாமதிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப என்னுடன் கைகோர்க்குமாறு நான் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

நாட்டுக்குப் புதிய அரசியல் கருத்துருவும் ஒழுக்கமான அரசியல் பயணமும் தேவை. பழைய ஆட்சி முறை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அடிமட்டத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளின் முன்னேற்றத்துக்காகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” – என்றார்.

மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here