ஹட்டன் டிக்கோயா நகரசபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அசோக கருணாரத்ன மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் கே.டி விஜேவர்த்தன முன்னிலையில் இன்று (11) காலை சமய வழிபாடுகளுடன் கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஹட்டன் டிக்கோயா நகரசபை உப தவிசாளர், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர்.
இதன்போது கருத்து தொரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி அழகான, சமாதான நகரமாக விளங்கும் ஹட்டன் டிக்கோயா நகரமானது ஜனாதிபதி அநுரகுமாரவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் சகல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அமைதியாக, அழகாக வாழக்கூட்டிய நகரமாக மாற்றியமைத்துக் கொடுக்கப்பட்டும்.
அத்தோடு நீண்ட கால பிரச்சினையாக காணப்படும் ஹட்டன் டிக்கோயா நகர எல்லைப்பகுதி கழிவகற்றல் பிரச்சானைக்கு க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.