கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தல்

0
139

2.5 மீற்றர் உயரத்திற்கு கடல் அலைகள் அதிகரிக்க கூடும் என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதனால் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்தொழில் மற்றும் கடற் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் உயரத்திற்கு கடல் அலைகள் அதிகரிக்க கூடும் என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here