கடலட்டை பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சந்திரசேகர் சந்திப்பு!

0
39

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், கடலட்டை பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

யாழ். குருநகரில் நடைபெற்ற இச்சந்திப்பில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மணியந்தோட்டம், குருநகர் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கடற்றொழில் பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அத்துடன், தமக்காக அமைச்சர் முன்னெடுத்துள்ள திட்டங்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதேபோல கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் இதர பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் அமைச்சர் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here