காலி, ஹபராதுவ – ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடச் சென்ற 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடலில் ”நீர்ச் சறுக்கு விளையாட்டில்“ ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் நீரில் மூழ்கியதைக் கண்ட பிரதேசவாசிகளும், கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




