கடலோர பாதை ரயில் சேவைகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (16) மாலை ஜிந்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட கலு குமாரி ரயிலை மீண்டும் இயக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொழும்பிலிருந்து காலிக்கு செல்லும் ரயில்கள் பூஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ ரயில் நிலையங்கள் வரை மட்டுமே இயக்கப்படும்.
பெலியத்தவிலிருந்து வரும் ரயில்கள் காலி வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் பாதையை முழுமையாக மீட்டெடுக்க இன்னும் பல மணிநேரம் செல்லும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.