கடுமையான காய்ச்சலுடன் நான் நடித்த பாடல் காட்சி!

0
5
dailythanthi

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் வேதிகா. மும்பையில் பிறந்த நடிகை வேதிகா 2006 ஆம் ஆண்டு மதராசி என்ற தமிழ் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அதற்குப் பிறகு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி திரைப்படத்தில் நடித்திருந்தார் வேதிகா. இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

திரையுலகில் 18 வருடங்களுக்கு மேலாக பயணித்து வரும் வேதிகா சமீபத்தி அளித்த நேர்காணல் ஒன்றில், கடுமையான காய்ச்சலுடன் பாடல் காட்சியில் ஆடியதாக கூறினார். இது குறித்து வேதிகா கூறியதாவது: நான் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அழுத்தமானவை. ‘சுல்தான்’ பாடல் சரியான நேரத்தில் என்னிடம் வந்தது.

பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடன இயக்குநர். இந்த பாடலை நான் மிகவும் ரசித்து செய்தேன். பாடலை படமாக்கும்போது எனக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த உற்சாகம் என்னை சுறுசுறுப்பாக வைத்தது. அது ஒரு கவர்ச்சியான நடனம் மட்டுமல்ல. நடிப்பு திறனுக்குமான நடனமாகவும் உணர்ந்தேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here