கடும் குளிரால் வயோதிபர் மரணம். சிவனொளிபாதமலையில் சம்பவம்.

0
142

கடும் குளிர் காரணமாக சிவனொளிபாத மலை தரிசம் செய்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பம் நேற்று வியாழக்கிழமை சிவனொளிபாதமலை உச்சியில் 08 திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 96 வயது மதிக்கத்தக்க கரோலிஸ் அப்புஹாமி இமதுவ காலி பகுதியைச் சேர்ந்தவர் என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடும் குளிரான நிலவி வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here