நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி கண்டுள்ளதாக பல பாடசாலைகளின் ஆசிரியர் குழுவொன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள், பல்வேறு பொருளாதார பிரச்சினைகளால் ஹட்டன் தோட்ட நகர மற்றும் கிராமிய பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பாடசாலைக்கு வரும் மேலும் சில மாணவர்கள் காலையில் உணவு எதுவும் இன்றி வருவதாகவும் தோட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்த நிலைமைகள் கடுமையாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமைகளால் பாடசாலை மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி கற்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், பிள்ளைகளின் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தேவையான உணவை முறையாக வழங்க முடியாத நிலையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.