கட்டணம் செலுத்தாத 7 இலட்சம் பாவனையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிப்பு!

0
182

கடந்த 10 மாதங்களில் மின் கட்டணம் செலுத்தாததால் 7,88,235 நுகர்வோரின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு – வரி அதிகரிப்பு, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், மின்கட்டணம் செலுத்துவது தற்போது சவாலாக உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் இந்த ஆண்டு அரசாங்கம் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20,474 ஆகும்.

ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 481 நுகர்வோரின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நுகர்வோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6106 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here