கட்டிடத்திலிருந்து நாயை வீசி எறிந்து கொன்ற மனித மிருகம்!

0
190

சென்னை – உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து நாய் ஒன்றை, மர்ம நபர் ஒருவர் தூக்கி வீசியெறியும் காணொளி, தற்போது வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

நாயைத் தூக்கி எறிவதற்கு முன்பு அவர் கேமராவிற்கு போஸ் கொடுத்திருப்பது விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மிருகத்தனமாக நடந்து கொண்ட அந்நபரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சில அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதனிடையே அவரின் பெயர் கௌதம் எஸ் என்றும் சில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அவர் தலைமறைவாகி விட்டார் எனத் தெரிகின்றது. இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் கௌதம் எம்பிபிஎஸ் படிக்கும் இறுதியாண்டு மருத்தவத் துறை மாணவர் என்பதாகும்.

இதற்கிடையில், நாயைத் தூக்கி வீசும் காட்சி காணொளியாகப் படம் பிடித்த நபரையும் சென்னைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here