அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசலைச் சேமித்து வைத்திருந்த இரண்டு நபர்கள் கட்டுநாயக்க மற்றும் சிலாபம் பகுதிகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹினட்டியன பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 410 லீற்றர் டீசலை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த 40 வயதுடைய மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலியாவெல பகுதியில் 55 லீற்றர் டீசலை வைத்திருந்த 73 வயதுடைய இலுப்பதெனிய பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.




