கட்டுப்பணம் செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு

0
163

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இதேவேளை, நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here