கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாதை.

0
210

மாணவர்களின் நலன்கருதி வார்விக் தோட்டத்திலுள்ள கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் பாதையை புனரமைத்து மாணவர்களின் பாவனைக்காக இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்
கையளித்தார்.

வார்விக் தோட்டத்திலுள்ள கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் பாதை செங்குத்தாகவும் அதிக மழை காலப்பகுதியில் சேறும் சகதியுமாகவும் இருப்பதால், மாணவர்கள் பாடசாலைக்கு நடந்து செல்வதில் சிரமமான நிலையை கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் செந்தில் தொண்டமானிடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று,இப்பாதையை நிர்மாணித்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்துள்ளனர். செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here