கணவன் நஞ்சருந்தி உயிரிழந்த தகவலறிந்து அதே நஞ்சருந்தி உயிர்நீத்த மனைவி- யாழில் சம்பவம்…..

0
170

கணவர் இரசாயன திரவம் அருந்தி உயிரிழந்த தகவலறிந்ததும், மனைவியும் அதே இரசாயகத்தை பருகி உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ் நகரம், கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைத்தொழிலக பட்டறையொன்றில் நேற்று (8) இடம்பெற்றது.

திருநெல்வேலியை சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (34), மனைவி ரஜிதா (33) இருவருமே உயிரிழந்தனர்.

பகீரதன் நேற்று மாலை விபரீத முடிவெடுத்து நகைத் தொழிலுக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை பருகியுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த தகவலையறிந்ததும் மனைவியும் அதே இரசாயனத்தை உட்கொண்டு உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களின் முன்னர் அவர்கள் பிரசவித்த குழந்தையொன்று, சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளது. அந்த மனவிரக்தியில் அவர்கள் இருந்தனர் என தெரிய வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here