கண்களில் உண்டான கருவளையத்தை எவ்வாறு எளிய சிகிச்சைகள் மூலம் சரிசெய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கண்ணில் சிலருக்கு கருவளையம் உண்டாகி சோர்வுடன் அவர்கள் இருப்பதைக் காணமுடியும். இதற்கு முக்கிய காரணம், அதிகமான அளவு கணினி திரைக்கு முன்பு இருப்பதும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவம் சரியாக நீரை எடுத்துக்கொள்ளாததும் எனலாம்.
கருவளையத்தைச் சரிசெய்வது எப்படி? கண்களை அடிக்கடி நீரில் கழுவுவதும், அடிக்கடி நீர் குடித்துக்கொண்டு இருப்பதும் தான் முதல் வழி. பின், கண்களில் அவ்வப்போது மசாஜ் செய்வதும் கருவளையத்தைச் சரிசெய்ய முக்கிய வழியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நன்கு 8 மணி நேரம் தூங்கி எழுவதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கருவளையத்தைச் சரிசெய்ய உதவும் எளிய டிப்ஸ்:
கருவளையம் ஏற்பட்ட பகுதிகளில் பச்சை வாழைப்பழத்தின் தோலில் விளக்கெண்ணெயினை தோய்த்து, கண்களைச் சுற்று ஒத்தடம் வைத்து கழுவி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
உருளைக்கிழங்கு சாறினை எடுத்து கருவளையத்தில் ஒத்தடம் வைத்து வந்தால் கருவளையம் நீங்கும்.
வெண்ணெய்யுடன் மஞ்சள் தூள், ஆரஞ்சு சாறு கலந்து பேஸ்ட் செய்து, கருவளையம் உள்ள பகுதிகளில் அப்ளை செய்துவந்தால் கருவளையம் நீங்கும்.
புதினா சாறு மற்றும் கேரட் சாறு ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக்கி, கண்களைச் சுற்றி தடவி வர கருவளையம் நீங்கும்.
அதேபோல் தினமும் இரவில் உறங்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து வந்தால் கருவளையம் மெல்ல மெல்ல நீங்கும்.
வெள்ளரிக்காய் கருவளையங்களை குறைக்க உதவுகிறது. இதனை தினமும் கண்களைச் சுற்றி வைத்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து வெற்று நீரில் கழுவ வேண்டும்.
ஒவ்வொரு கண்ணின் கீழும் ஒரு நிமிடம், மோதிர விரலை மட்டும் பயன்படுத்தி தினமும் பாதாம் எண்ணெயினை தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, ஈரமான பஞ்சினால் மெதுவாக துடைக்கவும்.
வைட்டமின் A,C, K மற்றும் E மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்களை உணவில் எடுத்துக்கொள்ள கருவளையங்கள் குறையும். சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, அதில் புதிய பழங்கள், சாலடுகள், முளை கட்டிய தானியங்கள், தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட பால், பாலாடைக்கட்டி (பனீர்), பருப்பு, பீன்ஸ், இலை பச்சை காய்கறிகள், முட்டை மற்றும் மீன் ஆகியவை அடங்கும்.




