கண்டா வர சொல்லுங்க திகாம்பரத்துக்கு சச்சுதானந்தன் அரைக்கூவல்.

0
161

மலையக மக்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தை யாராவது கண்டால் மலையக பக்கம் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்துக்கு அழைத்து வாருங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா காலப்பகுதியிலும் மலையக மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற ஜீவன் தொண்டமான் அர்பணிப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்.மக்களுக்கு கொரோனா ஏற்பட கூடாதென அரசாங்கத்துடன் பேசி அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்து வருகின்றார்.நாடு பொருளாதார பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் எவ்வித தங்கு தடையின்றி நுவரெலியா மாவட்டம் முழுவதும் பல கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.அதேபோல இச்சூழ்நிலையில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வருகின்றார்.இப்படி தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மத்தியில் மக்களின் வாக்குகளை சூறையாடி கொழும்பிலிருந்து கொண்டு தன் சகாக்கள் மூலம் சத்தம் போடும் திகாம்பரம் நுவரெலியா மாவட்டத்துக்கு வர பயப்படுவது ஏன் என சச்சுதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வெறுமனே அடுத்தவரை விமர்சித்து பிழைப்பு நடத்துவதை விட அனைத்துக்கும் செயல் வடிவம் கொடுப்பதே இ.தொ.காவின் எண்ணம் அதையே தற்போது செய்து வருகின்றோம்.மாறாக மக்களின் வாக்குகளை சூறையாடி இ.தொ.காவை விமர்சனம் செய்யும் திகாம்பரத்துக்கும் அவருடைய சகாக்களுக்கும் தகுந்த பதிலடி வழங்க மக்கள் தயாராகி இருப்பதாகவும் இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here