கண்டி,தன்வில, கெலாபொக்க தோட்டத்தில் சிறுவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்க தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து தோட்ட மக்களால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து செந்தில் தொண்டமான் தலையீட்டால் இப்பிரச்சினைக்கு 24 மணிநேரத்திற்குள் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
கண்டி,தன்வில, கெலாபொக்க தோட்டத்தில் வெளிமாவட்டங்களில் பணிபுரிபவர்களின் பிள்ளைகள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலே அனுமதிக்கப்பட்டு வந்தனர் . தோட்ட நிர்வாகம் வெளிமாவட்டங்களில் பணிப்புரிபவர்களின் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்க திடீரென மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தோட்ட பொது மக்களால் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
செந்தில் தொண்டமான் அவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்டு அவருடன் இது தொடர்பாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்று தந்துள்ளார்.
இழுப்பரியாக இருந்த இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப் பெற்று தந்தமைக்காக அத்தோட்ட மக்கள் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.