கண்டி – கலஹா– தெல்தோட்டை பல்லேகம மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை

0
171

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கலஹா – தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் தீவிர முயற்சியால் மேற்படி பகுதியில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

“ அனைவருக்கும் சுத்தமான – சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்து வருகின்றார். அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் மக்களுக்கு சிறந்த முறையில் குடிநீரை பெற்றுத்தர நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.” – என்று பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

“பல்லேகம குடிநீர் திட்டம் ஊடாக 450 இற்கு அதிகமான குடும்பங்களுக்கும், பள்ளிவாசல் மற்றும் பாடசாலை உள்ளடங்களாக அனைவருக்கும் பயன்பெறமுடியும்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான குடிநீர் தேவையை எனது வேண்டுகோளுக்கு அமைவாக குவைத் நாட்டின் அல்நூர் தொண்டு நிறுவனத்தின் ஊடாக பத்து மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது.” – எனவும் பாரத் அருள்சாமி கூறினார்.

குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் அல்நூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அலியார், அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரகு இந்திரகுமார், பலேகம பள்ளிவாசல் தலைவர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“ என்னுடைய கோரிக்கைக்கு அமைவாக வேலை திட்டத்தை நிறைவுப்படுத்திக் கொடுத்த அல்நூர் தொண்டு நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல வேலை திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம்.” – எனவும் பாரத் அருள்சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here