கண்டி திகனயில் நடைபெற்ற இனக்கலவரம் போல் பசறையிலும் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேணடும் என கோரிக்கை விடுக்கின்றார் பசறை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் அவர்கள்
இன்று (07) பதுளை ஹெரிடேஜ் விருந்தகத்தில் நடைபெற்ற ஊடகவியளார்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
நான் பசறை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன். தற்போது எனக்கு எதிராக ஒருசிலர் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றனர். இதனை நான் ஆரம்பத்தில் பெரிதாக பொருட்படுத்தவி;ல்லை. இருந்தும் எனக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய ஆதரவாளர்கள் தோட்ட பொது மக்கள் இதற்து எதிராக செயற்பட் முன் வந்துள்ளனர். இவை செயற்படும் சந்தர்பத்தில் பசறை பிரதேசத்தில் ஒரு சுமூகமற்ற நிலவரம் ஏற்படும்;. தற்போது இதனை தடுத்து நிறுத்தி மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காகவும் அமைதிகாப்தற்காவுமே இந்த ஊடகவியளார் சந்திப்பை நடாத்தி உள்ளேன்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் உடனடியாக பேசி முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை பேனுமாறு கோரியுள்ளனர். தற்போது ஐக்கிய தேசிய கட்சியினர் என சொல்லிக் கொண்டு இந்த முறையற்ற செயற்பாடுகளில சிலNர் ஈடுபட்டு வருவகிறனர். இவர்கள் பல சமூசவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். பதுளை மாவட்;டத்தின் பிரபல அரசியல்வாதியிடம் பணம் பெற்றுக் கொண்டு இந்த சமூக சீரழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பசறை தேர்தல் தொகுதியில் இன மத மொழி பாகுபாடு இன்றி சமாதனத்துடனனும் ஐக்கியத்துடனும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையும் அதுவே இந்நிலையில இதனை குழப்பும் வகையில் இந்த செயற்பாடுகள் நடைபெருவது கண்டிக்கதக்கது. இது சம்பந்தமாக ஆராய்து முடிவு எடுக்குமாறு பசறை பொலிஸாருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கும் அறிவித்துள்ளேன். அவர்கள் உடனடியாக தீர்வு காண்பதாக கூறியுள்ளார். மேற்படி செயற்பாடுகளை ஒத்த செயற்பாடுகள் பல இந்த பிரதேசத்தில் நடைபெற்ற நடைபெற இருந்த சந்தர்பத்தில் அதனை நான் தடுத்து நிறுத்தி சமாதான நிலையை ஏற்படுத்தி உள்ளேன்.
எனவே மக்களும் ஆதரவாளர்களும் இந்த விடயம் தொடர்பில் பொருமை காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் .ஊவா மாகாண சபை உறுப்ப்pனர்கள் பசறை ஐ.தே.கட்சியின் பிரதேச சபை தலைவர் உட்பட பசறை லுனுகல அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களும் எங்களுடனே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது இங்கு வந்துள்ளனர். இவர்களின் இந்த இன ரீதியாக செயற்பாடுகள் குறித்து மக்கள் உட்பட ஊடகங்கள்¸ சமூகவளதள நண்பர்கள் பொருப்புடன் செயற்பட வேண்டும். திகன மாவனெல்லையில் நடைபெற்ற இனக் கலவரம் போல் பசறையில் நடைபெற நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.
மக்களும் அவதாகமாக இருக்க வேண்டும். நான் இந்த தேர்தல் தொகுதியின் தமிழ் அமைப்பாளராகவும் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுத்து வருவதாலும் இந்த பிரச்சனை உறுவாகி உள்ளது. என்று கூறினார்.
இந்த ஊடவியலாளர் சந்திப்பில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆ.கணேசமூர்த்தி பசறை ஐ.தே.கட்சியின் பிரதேச சபை தலைவர் உட்பட அனைத்து பசறை ஐ.தே.கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு இந்த விடயம் தொடர்பில் அதிருப்தியினை தெரிவித்தனர்.
பா.திருஞானம்