கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (16) பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




