கண்டி குண்டசாலை, பள்ளேகல ஸ்ரீ முத்துமாரியம்மன் பெரிய கோவிலின் வருடாந்த தேர் திருவிழா (27.07.2018) அன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.இந்த வருடாந்த தேர்த்திருவிழாவானது, விநாயகர் வழிப்பாடு, கொடியேற்றம், கரகம் பாலித்தல், பால்குட பவனி போன்ற நிகழ்வுடன் விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், 28.07.2018 சனிக்கிழமை அன்று காளி அம்பாள் கரகம் உள்வீதி உலாவும், அதனை தொடர்ந்து மாலை வேட்டைதிருவிழா நடைபெற்ற பின் மாவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை ஆகியன நடைபெற்று தேர்பவணி இடம்பெறவுள்ளது.
அத்தோடு, 29.07.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுவதோடு மாலை பொங்கல் பூஜையும் நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து, 30.07.2018 திங்கட்கிழமை ஸ்ரீ காளி அம்மன் பூஜையும், 18ஆம் படி கருப்பண்ணசாமி பூஜையும், தீர்த்தோற்சவமும் நடைபெற்று விழா இனிதே நிறைவுபெறவுள்ளது.
(க.கிஷாந்தன்)



