கண்டி மாவட்டத்தின் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று 18.06.2021 முதல் 21.06.2021 வரை நடைபெறவுள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இதன்போது 50000 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன . கடந்த வாரம் நடைபெற்ற கொவிட் குழு கூட்டத்தில் எமது பெருந்தோட்டத்தினைச் சார்ந்த மக்களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் . அந்தவகையில் நோய்தொற்று அதிகமாகவிருக்கும் பஸ்பாக கோரலை வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள நாவலப்பிட்டி பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது . அதன்படி 20.06.2021 அன்று வெஸ்டோல் தமிழ் மகா வித்தியாலயத்தில், வெஸ்டோல் , ஹயிட்ரி , விக்டன் . டெம்பஸ்டோ , பார்கேபல் , கிரீன்வுட் , போகில் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
அன்றையதினம் இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் , விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் மற்றும் அனைத்துவிதமான வசதிகளும் எமது பிரஜாசக்தி அபிவிருத்தி திட்டத்தினூடாகவும் , அவ்வவ் பிரதேசங்களைச் சார்ந்த முன்கள பணியாளர்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஆகவே இப்பிரதேசங்களைச் சார்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தானாக முன்வந்து இத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இத் தடுப்பூசிகள் பெற வழிகாட்டியாக செயல்பட்ட ஆளுநர் அமைச்சர்கள் சுகாதார பிரிவினருக்கு எம் நன்றிகள்
க.கிஷாந்தன்