கண்டி – மஹியங்கன வீதியில் தெல்தெனிய வேகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரும் பின்னால் அமர்ந்து சென்ற சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த சிறுவன் மஹியங்கன மாபாகடவெவ பகுதியை சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெல்தெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.