கண்டி வீதியில் மீட்கப்பட்ட ரவை தொகுதி!

0
5

கொழும்பு – கண்டி வீதி, 76ஆம் கட்டைப் பகுதியிலுள்ள உணவகத்துக்கு அருகில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட 09 மில்லி மீற்றர் வகை துப்பாக்கிக்குரிய 15 தோட்டாக்களுடன் கூடிய ரவை தொகுதி முன்னாள் நிதி பிரதி அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலாளருக்குரியது என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 06ஆம் திகதி குறித்த தோட்டாக்கள் அடங்கிய ரவை தொகுதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கேகாலை பொலிஸார் இந்த ரவை தொகுதி கலிகமுவ அபன்பிட்டியவைச் சேர்ந்த ஹர்ஷ ரகுனாத சியம்பலாபிட்டிய என்பவருக்குரியது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன் 2008ஆம் ஆண்டு அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட பிஸ்டோல் ரக துப்பாக்கிக்கு மேலதிகமாக மெகசின் துப்பாக்கியொன்றும் கையகம் வைத்திருந்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொடுத்த முன்னாள் பிரதி அமைச்சரின் சகோதரரொருவரான ஹர்ஷ ரகுநாத சியம்பலாபிட்டிய என்பவர் அவரின் பிஸ்டோல் ரக துப்பாக்கியை வைத்திருந்த பை திறந்ததால் ரவை தொகுதி அறியாமல் கீழே தவறி விழுந்து விட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here