கண்டி வுட் சைட் தோட்டத்தில் பல ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் ; கணேசன் பெரியசாமி குற்றச்சாட்டு!

0
213

“கண்டி மெத தும்பர வுட் சைட் தோட்டத்தின் பல நூறு ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதற்கு முழு பொறுப்பும் இ.தொ.காவே என மெத தும்பர பிரதேச சபையின் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் கணேசன் பெரியசாமி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் மெத தும்பர வுட் சைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணியை வெளியாருக்கு வழங்குவதற்கு மறைமுகமாக வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.இச்செயற்பாடு, வேலியே தோட்டத்தை மேயும் கதையாக இருக்கின்றது. இருநூறு ஏக்கர் நிலத்தை தோட்டத்தில் இருந்து எடுத்து, இரண்டு ஏக்கர் படி வெளியாருக்கு கொடுக்க எந்த அடிப்படையில் உடன்பட்டுள்ளார்களென தெரியவில்லை.

தற்போது தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் வெளியாருக்கு இரண்டு ஏக்கர் படி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.
இது சம்பந்தமாக வெளிக்கொண்டு வரும் போது போதெல்லாம் பொறுப்பில்லாதவர்களை வைத்து அறிக்கை விடும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.அதை விடுத்து பிரச்சனையை எடுத்து கூறும்போது கட்சி சாகாக்களை வைத்து அறிக்கை விடுத்து பின்புறம் சூட்சுமமாக காணிகளை விற்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக கண்டி மெததும்பர வுட்சைட் பிரதேச சபை உறுப்பினர் கணேசன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here