கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்தோட்ட பிரிவான தேயிலை மலை
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரண்டு அடி உயரம் கொண்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட உண்டியல் நேற்று (29) இரவு மர்ப நபர்களினால் உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் களவாடப்பட்டுள்ளது
குறித்த ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்ட உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணத்தை களவாடப்பட்டு உண்டியலினை ஆலய வெளிப்பகுதியில் வீசப்பட்டுள்ளனர்.
இவ் ஆலய உண்டியலில் காணப்பட்ட பணம் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஆலய நிருவாகத்தினரினால் எடுக்கப்படாடத பணம் குறித்த உண்டியலில் இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் மோப்ப நாய்யின் உதவியுடன்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
டி. சந்ரு