கந்தப்பளையில் பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

0
150

கந்தப்பளை, ஹைபொரஸ்ட் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வீரையா காந்தி என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியலவில் நுவரெலியா- ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் ஹைபொரஸ்ட் இலக்கம் இரண்டு – குருந்து ஒயா தோட்ட தொழிற்சாலைக்கு அருகிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து, ஹைபொரஸ்ட் பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியில் பயணித்தவர்மீது மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here