கந்தப்பளை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் புலமைபரிசீல் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கும் இலவச பரீட்சை வினாத்தாள்களை வழங்க நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தீர்மானித்துள்ளார்.
அந்தவகையில் இம்முறை புலமை பரிசீல் பரீட்சையை எதிர்கொள்ளும் அனைத்து பாடசாலைகளுக்கும் நேரடி விஜயத்தை மேற்கொண்டு முதலாம் கட்ட வினாத்தாள்களை கையளித்தார்.தொடர்ந்து அனைத்து கந்தப்பளை பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலும் இலவசமாக புலமைபரிசீல் மாதிரி வினாத்தாள்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்