நாடலாவிய ரீதியில் புதன்கிழமை 25 க்கு மேற்பட்ட பொது அமைப்புகள் ” 1000 ரூபாய் இயக்கம்”என்ற பொது அமைப்பு பேரில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாவை வழியுறுத்தி ஒருநாள் போராட்ங்களளை முன்னெடுத்தனர்.
அதேவேளையில் ஒறுமி மற்றும் ஆயிரம் ரூபாய் இயக்கம் மாபெரும் அழுத்த போராட்டத்தை கொழும்பில் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் அதன் பிராந்திய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன் தலைமையில் கந்தப்பளை நகரம் மற்றும் ஹைபொரஸ்ட் பகுதியில் (23) காலை 11 மணியலவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
டி,சந்ரு