கனடாவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

0
14

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலைக்குள் நேற்று பகல் வேளையில் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், சம்பவ இடத்திலேயே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here