கபீர் ஹாசிமுக்கு கோபா தலைவர் பதவி!

0
2

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று (6) ராஜினாமா செய்தார்.

கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதால், அதற்கான இடத்தை வழங்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அரவிந்த செனரத் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கோபா குழுவின் தலைவராக  அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டதுடன், சுமார் ஏழு மாதங்களாக இந்தப் பதவியில் இருந்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here