கப்பல் கதை கூறும் அரசாங்கம்.லெட்சுமனார் சஞ்சய் தெரிவிப்பு.

0
166

அரசாங்கம் எதற்கெடுத்தாலும் கப்பல் கரையில் நிற்கிறது,கப்பல் வந்துக்கொண்டிருக்கின்றது,என சிறுபிள்ளை தனமாக கதை கூறுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி மிக தீவிர தன்மையை அடைந்துள்ளது. எதற்கெடுத்தாலும் வரிசை,பொருட்களின் தட்டுபாடு,மலைபோல நாளுக்கு நாள் எகிறும் விலையேற்றம் என நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்றது இவ் அரசாங்கம்.இப்படி இருக்கின்ற நிலையில் பொருட்களின் தட்டுபாடு ஏற்படும் பட்சத்தில் இவ் அரசாங்கம் கூறுகின்ற ஒரே பதில் கப்பல் வரும்,கப்பல் வந்துகொண்டிருகின்றது,கப்பல் கரையில் நிற்கின்றது இது தான் கூறும் காரணம்.

இப்படி காரணம் கூறுவதால் அரசாங்கத்தினை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்,அரசாங்கம் நாட்டையும் மக்களையும் காக்க மிகுந்த சிரமப்படுகின்றதென தப்பு கணக்கு போடுகின்றார்கள்.மக்கள் நன்றாக சிந்தித்து விட்டார்கள் இனியும் இவ் அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ நம்பி ஒரு துளி கூட பிரயோஜனம் இல்லையென முடிவெடுத்து விட்டார்கள்.

மேலும் இப்போதைய சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதைதான் அரசாங்கம் யோசிக்க வேண்டுமே தவிர அண்டை நாடுகளையே நம்பி வாழும் நிலைக்கு உள்ளாகிவிட கூடாது.எனவே இருக்கும் காலத்திலாவது நாட்டை சீராக்க கப்பல் கதையை கூறிவரமால் ஒரு நிலையான நன்மைமிக்க தீர்மானங்களை எடுக்க வேண்டுமென லெட்சுமனார் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here