கம்பணியின் சொந்தகாரர்களை அழைத்து பிரதமர் தலைமையில் பேச்சிவார்த்தை நடாத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நிதி அமைச்சின் செயலாளர் அழைப்பு!!

0
270

கம்பணியின் சொந்தகாரர்களை அழைத்து பிரதமர் தலைமையில் பேச்சிவார்த்தை நடாத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நிதி அமைச்சின் செயலாளர் அழைப்புமலையக பெறுந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் விடயம்
தொடர்பில் மலையகம் எங்கும் முன்னெடுக்கபட்ட சங்கிலி போராட்டத்தை இனங்கண்ட
பிரதமர் மஹிந்தராஜபக்ஸ அவர்கள் கம்பணியின் உரிமையாளர்களோடு
பேச்சிவார்த்தையினை 28.11.2018.புதன்கிழமை நடாத்த நிதிஅமைச்சின் செயலாளர்
ஊடாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள்
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன்
தொண்டமான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக அமைச்சின் ஊடகபிரிவு
தெரிவித்துள்ளது

கடந்த திங்கள் கிழமை மலையகமெங்கும் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபட வேண்டும் எனகோரியும் கம்பணி
காரர்களுக்கும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையிலே தான் இந்த
மனித சங்கிலி போரட்டம் முன்னெடுக்கபட்டது.

அந்த வகையில் புதன் கிழமை பிரதமர் மஹிந்தராஜபக்ஸ அவர்களோடு இடம் பெறவிருக்கின்ற பேச்சிவார்த்தைக்கு நான் கலந்து கொண்டு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் சிறந்த தீர்வு ஒன்றினை பெற்று கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சிவார்த்தையில் பெறுந்தோட்ட கம்பணிகளின்
நிறைவேற்று அதிகாரிகளுடன் பேச்சிவார்தையில் ஈடுபட்டு எவ்வித பயனும் இல்லை
எனவே மக்களால் முன்வைக்கபட்ட ஒரு அழுத்தத்திற்கு பலன்கிடைத்துள்ளதாகவும்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டார்

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here