கம்பனிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக திகாம்பரம் தலைமையில் போராட்டம்

0
187

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று கம்பனிகளின் அடக்கு முறைகளுக்கும் அடாவடிதனங்களுக்கம் பாரியளவில் முகங்கொடுத்த வருகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும் என போராடி பெறப்பட்ட சம்பள உயர்வில் முறையான கையாள்கை தவறிய பட்சத்தில் இத்தகைய நடவடிக்கைகளை தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனிகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் உருவாக்கம் பெற்றுள்ளது.

இதனை எதிர்த்து போராட்ட பிராணியம் உள்ள தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று களம் இறங்கியுள்ளது.

அந்தவகையில், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும் மஸ்கெலியாவில் இன்று (25.07.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமை தாங்கினார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் உடனிருந்தார்.

” ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது எனக்கூறப்பட்டாலும் தொழிலாளர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. அதேபோல பல தோட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. நலன்புரி சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளை கம்பனிகள் கைவிட வேண்டும்.” – என போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here