கம்பளை, கண்டி பிரதான வீதியில் கல்கெடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பத்தொன்பது வயது இளைஞர் உயிரிழந்தார்.
கம்பளை, கண்டி வீதியை சேர்ந்த அகமட் ரிஸ்வி மொஹமட் ரிஹாம் என்பவரே உயிரிழந்தவராவார்.
கண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவர், கம்பளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி அக்குரணையில் பணிபுரியும் இந்த இளைஞன், நேற்று மாலை (18) தனது பணியிடத்திலிருந்து தனது தினசரி நோன்பை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை விபத்தில் சிக்கினார்.
கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி நந்தன குமாரவின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.