லொறி மோதியதில் எட்டு வயதான பாடசாலை மாணவரொருவர், காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவெல பகுதியிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஜவெல பகுதியில் இருந்து எக்கால நகரிலுள்ள பாடசாலைக்கு அக்காவும், தம்பியும் நடந்து சென்றுள்ளனர்.
இதன்போதே தம்பிமீது லொறி மோதியுள்ளது. அத்துடன், லொறி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சாரதியும் காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் எக்கால பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.