கம்பஹா தோட்டத்தில் உள்ள கம்பஹா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய செயற்பாட்டு அறையை இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, புதிய செயற்பாட்டு அறை நிர்மாணிக்கப்பட்டு பாவணைக்கு கையளிக்கப்பட்டது.
செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.