தமிழ்நாட்டின்,கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அந்த கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
அத்துடன் அவர்களை நேரில் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களை கட்சியின் தலைவர் நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை கட்சியின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து குறித்த சந்திப்புக்காக அழைப்பு விடும் நடவடிக்கைகள் கட்சி நிர்வாகிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்திப்புக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்து வசதிகள் தமிழக வெற்றி கழகத்தினால் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது
 
		
