கரோலினா தொழிற்சாலை மூடப்பட்டதால் ஊரில் பதற்றம்.புஸ்பா விஸ்நாதன் நேரில் சென்று தீர்வு

0
177

ஹட்டன் பிளான்டேஷன் தோட்ட நிர்வாக கம்பனிக்கு உட்பட்ட வட்டவளை கரோலினா தோட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் மூடப்பட்டுள்ளாதால் குறித்த தோட்ட மக்கள் பணி பகீஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மீளவும் தொழிற்சாலையை திறக்க கோரி பணி பகீஸ்கரிப்பை முன்னெடுத்ததோடு குறித்த தோட்டத்தில் பதற்ற நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரச்சனை தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணனிடம் குறித்த மக்கள் தெரிவித்ததையடுத்து மலையக மக்கள் முன்னணியின் நிநிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் நேரடியாக சம்பவமிடத்துக்கு சென்று தோட்ட தலைவர்களுடாக பிரச்சனையை ட்டறிந்து தோட்ட முகாமையாளருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு தொழிற்சாலை அடுத்த மூன்று வாரத்துக்குள் திறக்க நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த தோட்ட துரை தெரிவிக்கையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவும் தொழிற்சாலை திருத்த பணி காரணமாகவும் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதே தவிர எக்காரணம் கொண்டும் நிரந்தரமாக மூட வாய்ப்பு கிடையாது எனவே அடுத்த மூன்று வாரத்துக்குள் வாரத்துக்குள் தொழிற்சாலை கோளாறுகளை நிவர்த்தி செய்து தொழிற்சாலையில் பணி புரியும் அறுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் வேலைகளை மீண்டும் வழங்குவதாக கடிதம் மூலம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலின் போது மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்,மலையக தொழிலாளர் முன்னணியின் தொழில் உறவு பணிப்பாளர் க.கனகராஜ்,அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here