கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று இறந்த சம்பவத்தினை அடுத்து பெரும் பதற்றநிலை

0
217

கலஹா சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று இறந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 வயதுடைய குழந்தை ஒன்றை வைத்தியசாலை அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதில் குறித்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து இவ்வாறு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here