கல்கிசை கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதோடு, பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த சிறுவர்களை மீட்டுள்ளனர்.
16 வயதான மீட்கப்பட்ட சிறுவர்கள் வெல்லம்பிட்டி, கட்டுகுருந்த மற்றும் ஹோகந்தர பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.




