கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு!

0
196

ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறை தினமென்பதால் ஆகஸ்ட் 8, 9,10 ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

12ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வீட்டிலிருந்து கற்பதற்கான செயற்பாடுகளை வழங்கியோ அல்லது இணைய வழி மூலமோ கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் போக்குவரத்து சிக்கல்கள் இல்லாத பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன் வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் வௌ்ளிக் கிழமைகளிலும் பாடசாலைகளை திறக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here