கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராகிருஷ்ணன் ஆறுமுகன் தொண்டமானிடம் வேண்டுகோள்!!

0
137

மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மத்திய,ஊவா மாகாண கல்வி அமைச்சுக்களை கல்வி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து செயற்பட ஏற்பாடு செய்ய வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் எம்.பியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு இணைந்து செயற்பட்டால் எமது கல்வி நிலையை மிக விரைவாக முன்னேற்ற முடியும். இணைந்து நாம் செயற்படாவிட்டால் எதிர்கால சமூகம் எம் இருவரையும் குறை கூறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சப்ரகமுவ, ஊவா, மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற கட்டட அபிவிருத்தி தொடர்பாகவும் கல்வி அமைச்சின் அனைவருக்கும் கணிதம் என்ற திட்டம் தொடர்பாகவுமான கலந்துரையாடல் ஒன்று நேற்று சப்ரகமுவ கல்வி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மின்னேரிபிட்டிய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சி ரீதியாக பல அரசியல் இருந்தாலும் அவர்கள் கல்வி என்று வருகின்ற பொழுது சமூக ரீதியாக ஒன்றுபடுகின்றார்கள். ஆனால் மலையகத்தில் இந்த நிலை இல்லை. இதன் காணரமாகவே நாம் கல்வியில் தொடர்ந்து பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம்.

இன்று மலையகத்தின் கல்வி நிலை பின்னடைவிற்கு அரசியலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக வந்த பின்பு அனைத்து மாகாணங்களிலும் இருக்கின்ற கல்வி அமைச்சர்கள் என்னிடம் வந்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

அதன் காரணமாக அனைத்து மாகாணங்களுக்கும் கல்வி அமைச்சின் சேவை மிகவும் இலகுவாக சென்றடைகின்றது.ஆனால் மத்திய ஊவா மாகாணங்களில் அந்த நிலைமை இல்லை.இதற்கு காரணம் அரசியல் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை.

ஆனால் தேர்தலுக்கு பின்பு நாம் அனைவரும் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே எமது மலையக கல்வியை அபிவிருத்தி செய்ய முடியும்.அதற்கு சிறந்த உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிப்பிட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here