கல்வி கட்டமைப்பில் நிகழவுள்ள மாற்றங்கள்!

0
143

பாடசாலை கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளதாக தேசிய கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 160 பாடசாலைகள் உள்வாங்கப்படும்.

இந்த திட்டத்தில் பாடத்திட்டம், கல்வி கற்பிக்கும் முறை மற்றும் பரீட்சை முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

21ம் நூற்றாண்டில் உலகத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களை மாற்றுவதே எமது நோக்கம்.

பரீட்சைகளில் மாத்திரம் மாணவர்களின் அறிவை ஆராயும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கல்வி முறையின் ஊடாக, செயல் திறனான ஒருவர் உருவாகமாட்டார்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here