ஆசியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான வரையறுக்கப்பட்ட கல்வி சேவையாளர்களி சிக்கன கடனுதவி கூட்டறவு சங்கத்தின் பணிப்பாளர் மற்றும் மகாசபை அங்கத்தவர்கள் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் இன்று நடைபெற்றது.
குறித்த கூட்டறவு சங்கத்தின் மகா சபைக்கு ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து ஐந்து பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஸ்ரீ சிங்கள மகா மத்திய கல்லூரியில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
இம்முறை இக்கூட்டறவு சங்கத்தின் மகா சபைக்காக ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 15 பேர் வேட்புமனுக்களை சமர்பித்திருந்தனர்.இதில் இரண்டு சிங்கள உறுப்பினர்கள் உட்;பட ஏனைய அனைவரும் தமிழ் அங்கத்தவர்கள்.
வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதனை தொடரந்;து வாக்கெடுக்கும் 10 மணியளவில் வாக்கெடுக்கும் பணிகள் ஆரம்பமாகின மாலை நான்கு 30 மணி வரை நடைபெற்ற குறித்த தேர்தலுக்கு இம்முறை அரசியல் கட்சிகளிலிருந்தும் தொழிற்சங்கங்களிலிருந்தும்,சுயேட்சையாகவும் அங்கத்தவர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறான போதிலும் கடந்த காலங்களில் ஆட்சி செய்த பணிப்பாளர் சபைகள் பெரும் பாலானவை அரசியல் கட்சிகளை சேர்ந்தவையாகவே காணப்பட்டன.
ஏனினும் அங்கத்தவர்களின் தேவைள் மற்றும் சேவை முறையாக நடைபெறாததன் காரணமாக பல அங்கத்தவர்கள் அதிர்ப்தியிலேயே இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இம் முறை தெரிவாவர்கள் சிறந்த சேவையினை அங்கத்தவர்களுக்கு பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதிகமான ஆசிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்