கொரோனா காலப்பகுதியில் வாக்களித்த மக்களை பலர் கைவிட்டு விட்டனர்.ஆனால் மலையக மக்கள் முன்னணி மாத்திரமே மக்களோடு மக்களாக காணப்படுகின்றது என அதன் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கொரோனா சூழ்நிலையிலும் சரி எந்நிலையிலும் சரி ம.ம.மு மக்களை ஒரு போதும் கைவிட்டதில்லை.அதனால் தான் கோரோனாவின் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேடித்தேடி நிவாரணங்களை வழங்குவதாக கூறிப்பிட்டார்.
மேலும் ம.ம.மு தலைவர் வே.ராதாகிருஸ்ணனின் வேண்டுகோளிற்கு அமைய கட்டம் கட்டமாக மலையகத்தின் பல பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளோம்.இன்னும் வழங்க இருக்கின்றோம் எனவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மலையக மக்கள் முன்னணி மாத்திரமே மக்களோடு மக்களாக இருக்கின்றது என குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்