களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

0
152

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க அம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன்படி, பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக சுமார் 150 மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here